1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tambaram to beach train today cancel

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று ரத்து: என்ன காரணம்?

தாம்பரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - தாம்பரம் கடற்கரை ரயில்கள் ஒருசில ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் மீண்டும் கடந்த சில நாட்களாக மின்சார ரயில்கள் சென்னையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே தாம்பரம் முதல் கடற்கரை செல்பவர்கள் தங்கள் பயண திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை தாம்பரம் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் புறநகர் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் இன்று ஒரு நாள் மட்டும் என்ற தகவல் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!