1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:24 IST)

முதல் நாளிலேயே 3 மாணவர்கள் மாயம்: சென்னை மெரீனாவில் சோகம்!

கடந்த சில மாதங்களாக சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய முதல் நாளிலேயே 3 மாணவர்கள் சென்னை மெரீகா கடலில் குளிக்கச் சென்ற நிலையில் அவர்கள் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல் சென்னை மெரினா கடற்கரையிலும் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று முதல் சென்னை மெரினா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்றைய முதல் நாளில் சென்னை மெரினாவில் ஏராளமான பொதுமக்கள் குவிந்த நிலையில் சென்னை மெரினாவில் குளித்த 3 மாணவர்கள் திடீரென மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மாணவர்களை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.