1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:15 IST)

மாநகராட்சியாகிறது தாம்பரம் !!!

தமிழக அரசு பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்கியுள்ளது. 
 
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சோளிங்கர், திருநின்றவூர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு , முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைந்து நகராட்சிகளாக மாற்றப்படும். 
 
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூரை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.