வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:25 IST)

இரட்டை கோபுர தாக்குதலுக்கும், பின்லேடனுக்கும் தொடர்பில்லை! – தலீபான்கள் விளக்கம்!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பின்லேடனுக்கும், இரட்டை கோபுர தாக்குதலுக்கும் சம்மந்தமில்லை என கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் “அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்போது அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தார். ஆப்கன் மீதான போருக்கு அமெரிக்கா இதை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டது” என தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே அமெரிக்கா பின்லேடனை தேடி ஆப்கானிஸ்தானில் புகுந்தது. அப்படியிருக்க தலீபான்கள் தற்போது வரலாற்றையே திரித்து பேசி வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.