புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:19 IST)

சீனா, பாக்.-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தாலிபன்!

அனைத்து நாடுகளுடனும் சுமுக உறவுக்கு தயாராக இருப்பதாக ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபன் அறிவிப்பு. 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபன் செய்தி தொடர்பாளர், அனைத்து நாடுகளுடனும் சுமூகமான நட்புறவு கொள்ள தாலிபன் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்திலும் தாலிபன் நுழையாது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை பேச்சு வார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் 31 ஆம் தேதிக்குள் நாட்டைவிட்டு  வெளியேற வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.