1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:11 IST)

தலீபான்கள் கையில் அணு ஆயுதம் சிக்கும் அபாயம்?? – அலறும் உலக நாடுகள்!

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அச்சம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபாகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் இந்த மாத இறுதிக்குள் மொத்தமாக வெளியேற உள்ளது. இந்நிலையில் தலீபான்கள் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் தலீபான்கள் பாகிஸ்தானை கைப்பற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்படி கைப்பற்றினால் அங்குள்ள அணு ஆயுதங்கள் அவர்கள் வசம் செல்லும். இதனால் உலகளவில் பெரும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தலீபான்கள் கையில் அணு ஆயுதம் கிடைக்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பிடனிடம் செனட் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.