திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:22 IST)

அதிமுகவின் இரட்டை விரல், காமராஜர்.. கீழே சூரியன்..! - த.வெ.க தீம் பாடலில் இதை கவனிச்சீங்களா?

TVK Song

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று வெளியான நிலையில், கட்சி கொடிக்காக வெளியான தீம் பாடல் வைரலாகி வருகிறது.

 

 

அதில் ஆரம்ப காட்சியிலேயே அதிகார பலம் கொண்ட யானைகள் மக்களை மிதித்து துன்புறுத்துவது போலவும், அப்போது இரண்டு வெள்ளை யானைகள் வந்து அதிகார பலம் கொண்ட யானைகளை வீழ்த்தி மக்களை காப்பாற்றுவது போலவும் காட்டப்பட்டு அதிலிருந்து தீம் பாடல் தொடங்குகிறது.

 

அதன் விஷூவல்ஸில் ஒரு இடத்தில் நிழலாக காட்டப்படும் பேனர்களில் எம்.ஜி.ஆர் ஒரு பக்கம் இரட்டை இலையை காட்டுவது போலவும், முன்னாள் காமராஜர் நிற்பது போலவும் வைத்து நடுவே விஜய் மக்களுக்கு கையை உயர்த்தி காட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மக்கள் எல்லாரும் சூரியனை குறிப்பது போல கையை விரித்து காட்டுவது போல உள்ளதாகவும், இதன்மூலம் அனைத்து கட்சி ரெபரன்ஸையும் உள்ளே கொண்டு வந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் காமராஜர், எம்ஜிஆர்க்கு பிறகு மக்கள் மனதில் பெரிய அரசியல் தலைவராக விஜய் இருப்பார் என்பதையும் இது மறைமுகமாக குறிப்பிடும்படி உள்ளதாம்.

 

அதுபோல பாடலில் வீரக்கொடி, வெற்றிக் கொடி என கொடி பெயரிலேயே வரும் வார்த்தைகளில் விஜய்யை குறிப்பிடும் வகையில் விஜய்ய கொடி என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். விஜயன் என்றால் வெற்றி பெறுபவன் என்று பொருள். அந்த வகையில் விஜய்ய கொடி என்றும், விஜய்யின் கொடி என்றும் வார்த்தையில் காலம் காட்டியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K