செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (19:21 IST)

எம்.எல்.ஏ., நடத்தி வரும் போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு!

தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பாதாகையை தாங்குகிறேன் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நடத்தி வரும் போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய மாநில  அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தமிழர்களை மீட்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் டி.ராஜேந்தர் தமிழர்களை தாங்கிப் பிடிக்க இந்த பதாகையை தாங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கையில் ஏந்தியுள்ள பதாகையில்,  வெளிநாட்டில் பணிபுரிந்து கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் தமிழர்களை விரைந்து அரசு செலவில் மீட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.