செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (23:38 IST)

50 சதவீத செலவை குறைக்க சினிமா தயாரிப்பாளர்கள் முடிவு

கொரொனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறையும் மறுமடியும் முதலில் இருந்து வரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதே பாதிப்பு சினிமாவுக்கும் ஏற்பட்டுள்ளதால் இதை மீண்டும் எழுப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒரு புதிய முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி, மலையாள சினிமாவின் தயாரிப்பு செலவுகளை 50 % குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில், தியேட்டர் வெளியீட்டில் தயாரிப்பு செலவை 50% குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது