செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (17:02 IST)

என் இயக்கத்தில் விக்ரம்! ருசிகர தகவலைப் பகிர்ந்துகொண்ட அனுராக் காஷ்யப்!

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் விக்ரம் ஒரு படம் நடிப்பதாக இருந்து அது நடக்காதது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படுபவர் அனுராக் காஷ்யப். இவர் 1998 ஆம் ஆண்டு வெளியான மெஹாஹிட் படமான சத்யா படத்தின் கதாசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழ் நடிகரான விக்ரம் நடிப்பில் ஒரு படம் இயக்க முயற்சி செய்ததாகவும், அது நடக்காமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் ’எங்கள் சத்யா திரைப்படத்தை தென்னிந்தியாவில் வெளியிட முயன்ற போது எனக்கு விக்ரம் பரிச்சயம் கிடைத்தது. சில கதாபாத்திரங்களின் டப்பிங்கில் விக்ரம் எங்களுக்கு உதவி செய்தார். அப்போதுதான் அவர் சேது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வைத்து திரைப்படம் எடுக்கவேண்டும் என்று யோசித்தேன். ஆனால் சாத்தியப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.