செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (17:46 IST)

சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தான் !

கடந்த 2016 ஆம் ஆண்டு 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா நடித்த படம் ’24’. இப்படத்தை விக்ரம் குமார் இயக்கினார். இதில், சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்தனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், 24 படத்திற்குப் பிறகு விக்ரம் குமார் ஒரு தனியார் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சூர்யாவிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அது அவருக்குப் பிடித்துள்ளதாகவும் வரும் 2021 ஆம் ஆண்டில் புதிய படம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, சூர்யா ஹரியின் அருவா, பாண்டிராஜின் ஒரு புதிய படத்தை அடுத்து விக்ரம்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.