1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. t rajendar talk about vijay polytical entry

அரசியல் கட்சிங்க கொடுக்கலாம் காசு.. விஜய்கிட்ட இருக்குறது மாஸு!.. தெறிக்கவிட்ட டி.ஆர்.

vijay tr
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்ததால் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால் அவர்களை நம்பித்தான் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியும் துவங்கி தற்போது தேர்தலையும் சந்திக்கவிருக்கிறார்.. முதல் நிலை வாக்காளர்கள், 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் என விஜய் நம்புகிறார். அந்த நேரத்தில்தான் அவர் தனித்தும் போட்டியிடுகிறார்..

ஒருபக்கம் பொதுக்கூட்டம், பிரச்சாரம் என விஜய் எங்கு சென்றாலும் அவரை பார்க்க பல ஆயிரம் பொதுமக்களும், தவெக தொண்டர்களும், ரசிகர்களும், பெண்களும் கூடி விடுகிறார்கள்.. அவர்களை கட்டுப்படுத்துவதே போலீசாருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.. அதனால்தான் விஜய் ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால் காவல்துறை தரப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதனாலேயே பல பிரச்சாரங்களை விஜய் ரத்து செய்யவும் நேரிடுகிறது..

இந்நிலையில் விஜயின் அரசியல் வருகைப்பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் டி.ராஜேந்தர் ‘2021 தேர்தல் நடந்த போது அது வெறும் மும்முனைப்போட்டி.. அப்ப நடந்தது பொது தேர்தல்.. இப்ப நடக்கப்போவது புது தேர்தல்.. இந்த மும்முனைப் போட்டிக்கு மேல ஒரு புதுசா ஒரு நடிகரோட கட்சி சேர்ந்திருக்கு.. பல பெரிய கட்சிகிட்ட கோடி கோடியா இருக்கலாம் காசு.. ஆனா அவங்க கிட்ட இருக்குதா வேல்யூவான பேஸ்?.. ஆனால் விஜய்க்கு இருக்கிறது சினிமா மாஸ்.. அரசியலுக்கு அதுவும் ஒரு விதமான பேஸ்’ என அடுக்குமொழி வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!... இதுதான் காரணமா?..