தொடர்புடைய செய்திகள்
- அருவிகளில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்: குற்றாலத்தில் குளிக்க தடை
- இந்தியர்களுக்கு 10 லட்சம் விசா.. அமெரிக்காவின் தாராளம்..!
- நீண்ட இடைவெளிக்கு பின் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சுமார் ரூ.1000 குறைவு..!
- ஆரம்பிக்கலாங்களா..? உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்!
தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம்.. ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு..!
சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம் செய்ய 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனைக் குழுதலைவராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.
அவருக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சேகர் ரெட்டி, தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் - திருப்பதி, பெரியபாளையம் -திருப்பதிசாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தி.நகர் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக ரூ.19 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
