ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (10:01 IST)

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சுமார் ரூ.1000 குறைவு..!

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் ஒரே வாரத்தில் சுமார் ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. 
 
கடந்த 22ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44 ஆயிரத்து 80 என்று விற்பனையான நிலையில் இன்று  43,120 என விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரே வாரத்தில் ஒரு சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் 160 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 5390.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 43120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5860.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46880.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva