1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 27 மே 2023 (10:39 IST)

வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல்: போலீஸ் புகார் அளித்த எஸ்வி சேகர்..!

வெளிநாட்டிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக நடிகரும் பாஜக பிரபலமுமான எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகராக இருந்தவரை எஸ்.வி சேகர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை பாஜக தலைவர் ஆன பின் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் எஸ்வி சேகர் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கர்நாடக தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியதாகவும் அதனையடுத்து தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran