முகம் சுளிக்க வைக்கும் முதலிரவு காட்சி... விஜய் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் 2018ம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் அண்மையில் ஒளிபரப்பான எபிசோட் ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தனது அம்மா தேவியின் அனுமதி இல்லாமல் ஜே.கே.வை திருமணம் செய்துகொள்ளும் ரம்யா முதலிரவு காட்சியில் ரொமான்ஸில் எல்லைமீறி சென்றுள்ளார். இதில் படுக்கையறை, லிப்லாக் என எல்லை மீறியுள்ளனர். குழந்தைகளோடு குடும்பமாக அமர்ந்து பார்க்கும் சீரியலில் இப்படியா காட்டுவது என எல்லோரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள்.