1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 மே 2023 (14:49 IST)

அண்ணாமலை மீது முன்னாள் பாஜக நிர்வாகி போலீசில் புகார்! என்ன காரணம்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் பாஜக நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவையில் தான் நடத்தி வரும் உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்னாள் பாஜக நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். 
 
மேலும் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ள போதே தனது உணவகத்தில் உள்ள பொருட்களை அள்ளிச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் பழைய சோறு டாட் காம் என்ற நிறுவனத்தை கோவையில் நடத்தி வருவதாகவும் தனக்கும் அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில்  வழக்கு இருப்பதாகவும் பாஜக நிர்வாகி அண்ணாதுரை கூறினார். 
 
இந்நிலையில் திடீரென அண்ணாமலை உத்தரவு காரணமாக தன்னுடைய நிறுவனத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் வெளியே செல்லப்பட்டது என்றும் அங்கு பாஜக கொடி நடப்பட்டு பாஜக சேவை மையம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாதுரை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran