ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் ஒரு நபர் கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் லல்லன் குமாரின் தொலைபேசிக்கு கடந்த மார்ச் 2 ஆம் ஒரு தேதி அழைப்பு வந்துள்ளது.
அதை எடுத்துப் பேசியபோது, ராகுல் காந்திக்குக் கொலைமிரட்டல் விடுத்த நபர் எதிர்முனையில் பேசியுள்ளார். பின்னர், தான் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசிப்பதாகவும், தன் பெயர் மனோஜ் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, லல்லன் குமார், லக்னோவில் உள்ள சின்ஹத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.