1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (13:29 IST)

பொறுப்பிலிருந்து விலகுகிறேன்!. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!...

பொறுப்பிலிருந்து விலகுகிறேன்!. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!...
தமிழக பாஜகவில் பலரும் தலைவர்களாக இருந்திருந்தாலும் அண்ணாமலை அதில் குறிப்பிடத்தக்கவர். ஏனெனில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. இவருக்கு முன் எல்.முருகன், அவருக்கு முன் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பாஜக தலைவராக இருந்தாலும் அவர்கள் அண்ணாமலை போல தீவிரமாக செயல்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து செய்தியார்களை சந்தித்து திமுகவை பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர் அண்ணாமலை. பாஜக கட்சியில் சேர்வதற்கு முன் கர்நாடகாவில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். தன்னை விவசாயி மகன் என சொல்லிக் கொள்ளும் அண்ணாமலைக்கு விவசாயத்திலும் ஈடுபாடு உண்டு.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அண்ணாமலையை தூக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமித்தது பாஜக தலைமை.. அதன்பின் டெல்லி சென்று தேசிய அரசியலில் அண்ணாமலை ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார்..

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார். தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரன் அவர் கூறியிருக்கிறார்..