சிம்புவின் 42வது பிறந்த நாள்.. ‘அரசன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு..!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
இந்த சிறப்பான நாளில், வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சிம்புவின் 49-வது திரைப்படமான 'அரசன்' படத்தின் புதிய மற்றும் அதிரடி போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இணைந்து பணியாற்றுவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த 'அரசன்' திரைப்படம் வெற்றிமாறனின் 'வட சென்னை' உலகத்துடன் தொடர்புடையது என்ற தகவல் சிம்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குனர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்துறை வித்தகராக சிம்பு திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மதன்' முதல் 'வெந்து தணிந்தது காடு' வரை அவரது பரிணாம வளர்ச்சியை கொண்டாடும் வகையில் இந்தப் பிறந்தநாள் அமைந்துள்ளது.
Edited by Siva