1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (09:27 IST)

உனக்கு என்ன தகுதி இருக்கு? வாய்விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த சூர்யா!!

நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு விமர்சனங்கள் முன்வந்த நிலையில், அவர் இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதாக அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் கருத்தை விமர்சித்தினர். ஆனால், அவருக்கு ஆதரவாக கமல், சீமான் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால், இது குறித்து சூர்யா எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. 
 
ஆனால், இப்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பின்வருமாறு, ஒரு குடிமகனாக, சகமனிதனாகத்தான் கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினேன். தேசிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.   
மேலும், கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறிவிடக்கூடாது என்பதற்காக பேசினேன் எனவும் தெரிவித்துள்ளார்.