நண்பனின் மனைவி என்றும் பாராமல் இப்படியா செய்வது???..கோவையில் நடந்த பகீர் சம்பவம்

Last Updated: வெள்ளி, 19 ஜூலை 2019 (18:27 IST)
கோவையில் நண்பனின் மனைவி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டத்தின் நெகமம் அருகே உள்ள ஆவலம்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் தனது மனைவி ரஞ்சிதாவுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் சுப்ரமணியத்தின் நண்பன் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இதனால் மணிகண்டன் அடிக்கடி சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது ரஞ்சிதா குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார்.இதனால் ரஞ்சிதா மீது மணிகண்டனுக்கு ஆசை வந்துள்ளது. ஆதலால் அவரது வீட்டுக்கு சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சுப்பிரமணியம் வேலைக்கு சென்ற பிறகு அவரது வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது ரஞ்சிதா குளிக்கும்போது வீடியோ எடுத்துள்ளதாகவும், தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடியோவை அனைவரிடமும் காட்டி, அவமானப்படுத்தி விடுவதாகவும் ரஞ்சிதாவை மிரட்டியுள்ளார். மேலும் ரஞ்சிதாவை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார்.

உடனே இது குறித்து ரஞ்சிதா, மணிகண்டனின் மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ரஞ்சிதா தனது கணவர் சுப்ரமணியத்திடம் கூறியுள்ளார். அதன் பின்னர் சுப்ரமணியம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். நண்பனின் மனைவி என்றும் பாராமல், ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :