1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (09:55 IST)

மிரட்டலாவது ம*ராவது... அரசை எதிர்க்கவும் தயார்: களத்தில் குதிக்கிறார் சூர்யா??

புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டும் பட்சத்தில் சூர்யா சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
சமீபத்தில் நடிகர் சிவகுமார் அரக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தும், நீட் தேர்வு மற்றும் பலவிதமாக நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராகவும் அவர் பேசினார். அதில் ஒரு கெட்ட வார்த்தையும் பயன்படுத்தினார்.
இதனால் சூர்யாவின் பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பினர் மற்றும், பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு ஆதவாகவும் சில கட்சியினர் பேசினர். ஆனால், இது எது குறித்து நடிகர் சூர்யா பதில் அளிக்காமல் மெளனம் காத்து வந்தார். 
 
ஆளும் கட்சி தரப்பு சூர்யாவை மிரட்டியதாகவும், அகரம் பவுண்டேசன் தொடர்பாக இந்த மிரட்டல் இருந்ததாலேயே சூர்யா எதுவும் பேசாமல் மெளனமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சூர்யா இந்த விவகாரம் குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளாராம். 
ஆம், புதியக் கல்விக் கொள்கை குறித்த முழுமையான விவரத்தை சில கல்வியாளர்களிடம் சூர்யா கேட்டு தெரிந்துக்கொண்டு வருகிறாராம். புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டும் பட்சத்தில் சூர்யா சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக தகவலகள் தெரிவிக்கின்றன. 
 
உண்மையிலேயே அப்படி சூர்யா இதை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள நினைத்திருக்கிறார் என்றால் அது பலராலும் பாராப்படக்கூடிய ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்பது நிதர்சனம்.