தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே
- எம்பி ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை..!
- ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
- அமைதியாக இருங்கள்.. இல்லையேல் உங்கள் வீட்டுக்கு ED வரும்.. நாடாளுமன்றத்தில் மிரட்டிய அமைச்சர்..!
- செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை..!
செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி: கைது சட்டவிரோதம் இல்லை என அறிவிப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அவரது கைது சட்ட விரோதம் இல்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவரது கைது சட்ட விரோதம் என நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில் மூன்றாவது நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார்.
இதனை எடுத்து சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தொடந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதியும் அளித்துள்ளது.
Edited by Siva
