1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:40 IST)

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை..!

செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவருடைய வீடு பூட்டி இருந்ததை அடுத்து பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக பிரமுகர். சாமிநாதன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இன்று மீண்டும் கரூரில் சில இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் இடங்களில் ஒன்று செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டி இருந்தது. 
 
இதனை அடுத்து பூட்டை உடைத்து அமலாக்கத்துடைய அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran