தொடர்புடைய செய்திகள்
- எண்ணெய் தடவியதும் கொத்தாக உதிர்ந்த தலைமுடி..பியூட்டி பார்லர் மீது இளம்பெண் புகார்
- இளம் வீரர்கள் தவறு செய்வது இயல்புதான்… வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய பாண்ட்யா!
- ஆர்சிபி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!
- யார் ஆம்லேட் சாப்பிடுவது என்பதில் தகராறு.. மைத்துனரை அடித்தே கொன்ற மாமன்..!
- பிரபல நடிகையின் கணவர் 30 வயதில் மரணம்
எம்பி ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை..!
தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் ஒருவர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எம்பிர ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது
இந்த தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
