1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. supreme court order about admk case

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

supreme
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
திமுக பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மனு டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு ஓபிஎஸ் சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில் நீதிபதிகள் அதை நிராகரித்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது என்பதும் அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கு அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது 
தற்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு பின்னரே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்த விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் ஹேக் : 200 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்!