தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு, பண நெருக்கடியால், உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்து வந்த நிலையில்,இதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து, விளக்கம் கேட்டு, தமிழக அரசிற்கு கடந்த 24 ஆம் தேதி ஆளுனர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த சட்ட மசோதாவின் காலம் வரும் நவம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடைவிருந்த நிலையில், தமிழக அரசு அதற்கு விளக்கம் கொடுத்தது. ஆனால் ஆளுநர் இன்னும் அந்த விளக்கத்திற்குப் பிறகு ஒப்புதல் அளிக்காததால் மசோதா காலாவதியாகிவிட்டது.
இது ஆளும் கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், ஆளுனர் பதவி குறித்து விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ் நாடு ஆளு நர் பதவியை பதவி நீக்கம் செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட செயலாளர் கண்ணதாசன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், பதவி ஏற்ற நாளில் இருந்தே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj