திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:15 IST)

நடிகர் அமிதாப் பச்சன் பெயரை தடை: நீதிமன்றம் அதிரடிஉத்தரவு!

amitab
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புகைப்படத்தை அவரது அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நடிகர் அமிதாப்பச்சனின் புகைப்படங்களை அனுமதி இன்றி ஒரு சில விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவில் அமிதாபச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சிகள், லாட்டரி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே அமிதாப்பச்சனின் புகைப்படங்களை, பேனர்களை அவருடைய அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமிதாப்பச்சன் பெயர் போட்டோக்கள் மற்றும் பேனர் எதையும் முன் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Siva