1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (19:30 IST)

சென்னையில் திடீர் மழை

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் தற்போது திடீரென்று மழை பெய்து வருகிறது.

 
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.
 
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெவித்து இருந்தது.
 
இந்நிலையில் இன்று மாலை முதல் சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. திடீரென பெய்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது.