தூத்துகுடி துப்பாக்கி சூடு வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டத்தில் 100வது அன்று துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து தூத்துகுடியில் கலவரத்தை தூண்டிவிட்டதாக பலர் கைது செய்யபப்ட்டனர். அதில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை ஐகோர்ட் வழங்கியது. இதன்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் விடுதலையாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மொத்தம் 5 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றிணைத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.