1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Suchileaks issue Suchitra will be arrested soon

உச்ச நடிகர் நெருக்கடி ; சமாதானத்திற்கு மறுத்த சுசித்ரா விரைவில் கைது?

Suchitra
தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பின்னணிப் பாடகி சுசித்ரா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், யாரோ ஒருவர் தன்னுடைய டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், சுசித்ரா தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது செயல்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என அவரின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பற்றி சம்பந்தப்பட்ட எந்த நடிகர், நடிகரும் இதுவரை போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தற்போது இளைஞர்களின் கவனம் நெடுவாசல் நோக்கி இருக்கும் நிலையில் சமூகவலைதளங்களில் தவறான படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் கவனம் திசைதிரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சி, பாடகி சுசித்ரா மீது குற்றம் சுமத்தியுள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, சுசித்ராவின் டிவிட்டர் பதிவுகளில் உச்ச நடிகரின் மருமகன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால்,  உச்சநடிகர் ஏகத்துக்கும் அப்செட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, பீப் பாடல் விவகாரத்தில் அனிருத் மீது கோபமடைந்த அவர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என் அவர் கூறியதாக அப்போது செய்திகள் வெளியானது. தற்போது சுசித்ரா வெளியிடும் புகைப்படங்களிலும், தனது மருமகன் மற்றும் அனிருத் ஆகியோர் தொடர்புள்ளதால் அவர் கோபமடந்துள்ளராம். 
 
இதுதொடர்பாக, சுசித்ராவிடம் சமரசம் பேச முயன்றதாகவும், ஆனால் சுசித்ரா இதற்கு பிடிகொடுக்கததால், இந்தியா தேசிய லீக் கட்சி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய உச்ச நடிகர் தரப்பிலிருந்து நெருக்கடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சென்னை கமிஷனர் அலுவலக போலீசாரால், சுசித்ரா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Murugan