1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Subramanian swamy write a letter to cm stalin

முதல்வர் முக ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய திடீர் கடிதம்: என்ன கூறியுள்ளார்?

subramaniya swamy
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் நீண்ட காலமாக இந்து ஆலயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25, 26 ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அவ்வாறு செய்ய தவறினால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திருவண்ணாமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்!