செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (18:38 IST)

ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி!

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார்.
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியையும், அவரது ரசிகர்களையும் மீண்டும் சீண்டியுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் அதிக தீவிரத்துடன் செயல்படுகின்றனர்.

 
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, எத்தனை பேர் ரஜினிகாந்த் 420-இன் இணைய தன்னார்வ தொண்டர் படையில் சேர்ந்தீர்கள்? குறைவாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன் என பதிவிட்டு ரஜினியையும், அவரது தொண்டர்களையும் மீண்டும் சீண்டியுள்ளார். இதனையடுத்து அவரது பதிவில் ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.