செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (15:58 IST)

ஸ்டாலினின் மூக்குடைத்த விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதற்கு விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். விரைவில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் அவர் அரசியலில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார்.
 
அதனைடிப்படையில் மூத்த அரசியல்வாதியும் திமுக தலைவருமான கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று நேற்று ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இதே போல தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது கருணாநிதியை சந்தித்ததாகவும், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ், தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, கருணாநிதியை தான்தான் சென்று சந்தித்ததாகவும், விஜயகாந்த் சென்று சந்திக்கவில்லை எனவும் கூறி ஸ்டாலின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.