ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!
இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டம் காரணமாக ஆட்சியை இழந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்து வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் இந்தியாவில் இருக்கின்றார்.
இந்த நிலையில், அவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்டுகளும் டாக்கா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவில் உள்ள தூதரகத்திற்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் எழுதியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைக்காக, ஹசீனாவை திரும்ப அழைக்க விரும்புவதாகவும், இந்திய அரசுக்கு வாய்மொழியாக ஒரு குறிப்பு அனுப்பி உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்துறை அமைச்சகம், ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்தியா எந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran