வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (16:07 IST)

சென்னை சாலையில் தீப்பொறி பறக்க பைக்கை ஓட்டிய இளைஞர்கள்

சென்னையில் பிரதான சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. விடுமுறை நாட்களில் இவர்களது அட்டூழியத்திற்கு அளவே இல்லை.

சில சமயம் இவர்கள் ஏற்படுத்தும் விபத்தினால் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்க போலீஸார் பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் இதெற்கெல்லாம் பயப்படாத சில அடாவடி கும்பல் தொடர்ச்சியாக பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்பொழுது அரசு வெளியுட்ட அறிக்கையில், பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான தடையில்லா சான்றிதழை வழங்க தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
 
இதனையடுத்து சென்னையில் புத்தாண்டன்று தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்தபடியே பைக்கை வேமாக ஓட்டிச் சென்றுள்ளனர் ஒரு கும்பல். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருவதால், சம்பந்தப்பட்ட இளைஞர்களைப் பிடிக்க கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த செயலை செய்த இளைஞர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.