அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன்: ஆதரவு தெரிவித்த தினகரன்!

Last Updated: வியாழன், 4 ஜனவரி 2018 (16:44 IST)
தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசினார். செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :