1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Alert for Four Districts in Tamil Nadu

காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மழை
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி சென்று மீண்டும் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இந்த மாதம் 29ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்! விமான நிலையம் செல்பவர்கள் அவதி..!