தொடர்புடைய செய்திகள்
- கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு தரக்கூடாது! அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
- எவ்ளோ தொகுதி வேணும்.. நம்மகிட்ட வாங்க! – தேமுதிக – அமமுக பேச்சுவார்த்தை!?
- சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்
- கொரோனா எதிரொலி; கொடைக்கானலில் கட்டுப்பாடு! – திரும்பி செல்லும் பயணிகள்!
- சக்ரா திரைப்படம் சம்பாதித்த லாபம் எவ்வளவு தெரியுமா? கடுப்பில் விஷால்!
பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது! – குண்டை போட்ட சுப்பிரமணிய சுவாமி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாஜக ஒரு தொகுதியிலும் வெல்லாது என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் பாஜகவுக்கான தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பாஜகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி “தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறலாம். இல்லாவிட்டால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. வெற்றியோ, தோல்வியோ தேசிய கட்சியான பாஜக தனித்து போட்டியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
