திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:21 IST)

அவங்களுக்கு வேலை.. எங்களுக்கு வெயிட்டிங் லிஸ்டா? – சு.வெங்கடேசன் கண்டனம்!

உத்தரபிரதேசத்தில் ரயில்வே தேர்வு எழுதியவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி அளிப்பதற்கு எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடம் உள்ள நிலையில் உத்தரபிரதேச கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “உத்தர பிரதேச கோரக்பூர் வாரியத்தில் தேர்வு எழுதிய 54 பேரை தெற்கு ரயில்வே பணிகளுக்கு தேர்வு செய்துவிட்டு, சென்னை வாரியத்தில் தேர்வு எழுதியவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது மத்திய அரசு. உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.