மாசுகடுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர்! – தமிழக அரசு அதிரடி!
முன்னதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் புதிய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அவரை பதவிநீக்கம் செய்துள்ள தமிழக அரசு அவருக்கு பதிலாக சுப்ரியா சாகுவை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவராக அறிவித்துள்ளது. சுப்ரியா சாகு ஏற்கனவே சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.