1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (10:41 IST)

பாயும் போலீஸ்; பதுங்கும் ரவுடிகள்! – Storming Operation; 3,325 ரவுடிகள் கைது!

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் ஸ்டோர்மிங் ஆபரேஷனில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஸ்டோர்மிங் ஆபரேசனை அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட பல ரவுடிகள் வேகவேகமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 52 மணி நேரத்திற்கும் தமிழகம் முழுவதும் இதுவரை 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.