வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (23:30 IST)

ஐபிஎல்-2021 ; பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் 14வது சீசன் இரண்டாம் பகுதி போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 7;30 மணிக்கு நடைபெறும்  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

 இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சுத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்தது.

இதையடுத்துக் களமிறங்கிய ஐதராபாத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.