வெள்ளி, 21 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 மார்ச் 2025 (18:59 IST)

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை என பக்கத்து வீட்டுக்காரர் திருமண வீட்டாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், மாப்பிள்ளையின் தந்தை குண்டு காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஹால்டி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. அந்த நேரத்தில், "திருமணத்திற்கு எல்லோரையும் அழைத்த நீங்கள், பக்கத்து வீட்டுக்காரராக என்னை ஏன் அழைக்கவில்லை?" என ஒருவர் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
 
இதற்கு மணமகன் வீட்டார் சமாதானமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கியை எடுத்து சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து தவறுதலாக கிளம்பிய குண்டு மணமகனின் தந்தையை பாதித்ததால், அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற அந்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
 
திருமணத்திற்கு அழைக்கவில்லை என்ற கோபத்தில், கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கி சூடு, அந்த நபரின் செயலை மிகுந்த அதிர்ச்சியாக மாற்றியுள்ளது.
 
Edited by Mahendran