தொடர்புடைய செய்திகள்
- போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்தது போலீஸ்: அதிகரிக்கும் பதட்டம்!
- போராட்டத்தில் தீய சக்திகள் ஊடுறுவல்! – உள்துறை அமைச்சகம் விளக்கம்!
- பாபர் மசூதியை இடிக்கும் போட்டி: ஆர்.எஸ்.எஸ் பள்ளியால் சர்ச்சை!
- ’கான்’களே வாயைத் திறந்து பேசுங்கள் – ரசிகர்கள் வற்புறுத்தல் !
- மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவாரூர் பல்கலை ஒரு மாதம் விடுமுறை
மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. முதலில் வடமாநிலங்களில் இருந்த இந்த போராட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் நடந்து வருகிறது.
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி நேற்று திருவாரூர் மத்திய பல்கலை கழகத்திற்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தற்போது சென்னை பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் இன்று அல்லது நாலை வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது
இதேபோல் மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும் பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு அங்குள்ள மாணவர்கள் வெளியேற்றப்படும் அதிரடி நடவடிக்கையை அரசு எடுப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
