தொடர்புடைய செய்திகள்
- 10ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை! – தமிழக அரசு உத்தரவு!
- விபத்து நடந்த நெல்லை பள்ளிக்கு விடுமுறை - பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
- பெண்களை அப்படி பேசியது தவறு.. மன்னித்துவிடுங்கள்! – காங்கிரஸ் எம்.எல்.ஏ!
- பள்ளி கழிவறை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி - நெல்லையில் பதற்றம்!
- வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேருக்கு கொரோனா; 28 பேருக்கு ஒமிக்ரானா? – அமைச்சர் விளக்கம்!
நெல்லை டவுன் சாப்டர் பள்ளி விபத்து: பள்ளி மாணவர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் சாப்டர் பள்ளி விபத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் மேலும், ஒரு மாணவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
