1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in some places in chennai

சென்னையில் பல இடங்களில் கனமழை: 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல்!

rain
தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் திடீரென கடந்த ஒரு மணி நேரத்திற்கு மூழ்கியது என்பதும் மேகம் கருத்து மழை வரும் சாயல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர் தி நகர் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க  அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
அடுத்த கட்டுரையில்
கருப்பா இருக்க.. கலாய்த்த கணவன்! கடுப்பாகி கொலை செய்த மனைவி!