திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (16:04 IST)

சென்னையில் தொடங்கிய சிம்புவின் பத்து தல ஷூட்டிங்

நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் பத்து தல படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த சிம்பு கர்நாடகாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு ரிலீஸை ஒட்டி அதன் ப்ரமோஷனில் அவர் கலந்துகொண்ட நிலையில் இப்போது மீண்டும் சென்னையில் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.