1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:26 IST)

திராவிட மாடல் அரசு நடந்துகிட்டு இருக்கு.. நேற்று பொங்கிய மாணவரின் பழைய வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஜெகதீஷ் என்ற மாணவர் இறந்த நிலையில் அந்த மாணவரின் நண்பர் என்று கூறப்படும் ஒரு மாணவர் நேற்று  ஊடகங்கள் முன் பொங்கினார். 
 
அவர் நீட் தேர்வு எதிராக கேட்ட கேள்விகள் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த மாணவர்  பேசிய பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ’வட இந்தியா போல் தமிழ் நாட்டை நினைத்துக் கொண்டிருக்கின்றனர், இது பெரியார் வாழ்ந்த மண், அம்பேத்கர் வாழ்ந்த மண், திராவிட மாடல் அரசு இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். 
 
இதிலிருந்து இவர் பக்கத்து திமுககாரர் என்பதும் தெரியவருகிறது. எனவே நேற்றைய பேட்டி கூட திமுகவினர் செட்டப் செய்ததா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக நேற்று அமைச்சர் உதயநிதி பொங்கியது எல்லாம் நடிப்பா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விகளுக்கு இந்த மாணவர் என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://twitter.com/Johni_raja/status/1691164945482944512
 
Edited by Siva